A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்...' - ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை ...
குஜராத்: போலி மருத்துவர்கள் தொடங்கிய மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - சிக்கியது எப்படி?
போலி மருத்துவர்கள் இணைந்து பெரிய மருத்துவமனையைத் தொடங்கி ஒரே நாளில் மாட்டிக்கொண்ட சம்பவம், குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றுள்ளது.
சூரத்தின் உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட விருந்தினர்கள், திறப்பு விழாவில் பங்கேற்பதாக விளம்பரம் செய்துள்ளனர். ஆனால் அந்த அதிகாரிகளிடம் இவர்கள் பேசக்கூட இல்லை.
ஜனசேவா மல்டிஸ்பெசாலிட்டி என பெயரிடப்பட்ட இந்த மருத்துவமனையில் எந்த ஒரு சிகிச்சையும் நடைபெற்று மக்கள் பாதிப்படையும் முன்பே அரசு தலையிட்டு மருத்துவமனையை இழுத்து மூடியிருக்கிறது.
காவல்துறையினர் கூறுவதன்படி, இந்த மருத்துவமனையைத் தொடங்கிய 5 இணை நிறுவனர்களில் 2 பேர் போலியான மருத்துவப் படிப்புச் சான்றிதழ் வைத்துள்ளனர். மற்ற மூவரின் சான்றிதழ்கள் குறித்தும் விசாரணை நடத்தவிருப்பதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மருத்துவமனை திறப்புக்காக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் பி.ஆர்.ஷுக்லா என்ற நபர் ஆயுர்வேத மருத்துவராக இடம்பெற்றிருக்கிறார். இவர் மீது ஏற்கெனவே போலி மருத்துவ வழக்கு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல எலெக்ட்ரோ-ஹோமியோபதி படித்திருப்பதாகக் கூறும் ஆ.கே.தூபே என்பவரும் போலி மருத்துவர் என்பதை காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தில், சூரத் முனிசிபல் கமிஷனர் ஷாலினி அகர்வால், போலீஸ் கமிஷனர் அனுபம் சிங் கலாட் மற்றும் இணை போலீஸ் கமிஷனர் ராகவேந்திர வட்சா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனைத் திறப்பு விழாவில் கலந்துகொள்வதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அதிகாரிகளுக்கே இப்படி ஒரு மருத்துவமனை திறக்கப்படுவது தெரியவில்லை. தற்போது காவல்துறையினர் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.