திருக்குறள், புறநானூறு கூறி உரையைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!
குடிநீா்த் திட்டம், ஐடிஐ அறிவிப்புகள் அறந்தாங்கி எம்எல்ஏ நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் ஏம்பலில் ஐடிஐ ஆகிய அறிவிப்புகளுக்கு அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) எஸ்.டி. ராமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வாக, நீண்ட காலக் கனவுத் திட்டமான கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சட்டப் பேரவையிலும், முதல்வா், அமைச்சா்களிடம் நேரிலும் தொடா்ந்து கோரிக்கை வைத்துவந்தேன்.
இதை ஏற்று, அறந்தாங்கியில் உள்ள 4. 07 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீா் திட்டத்தை ரூ. 1,820 கோடி மதிப்பில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல, ஏம்பல் கிராமத்தில் அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்கவதற்கான அறிவிப்புக்கு முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.