செய்திகள் :

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

post image

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா ஆகிய மூன்று மகன்களும் சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணேசன்.

அனைவருக்கும் திருமணமாகி உள்ளூரிலேயே வசித்து வருகின்றனர். மூத்த மகனான கந்தசாமியுடன் செல்லையா வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு செல்லையா, அவருக்குச் சொந்தமான நெல் வயலை விற்று தனது மூன்று மகன்கள் மற்றும் மகளுக்கு சரிசமமாக பிரித்துக் கொடுத்தார். அவருக்கு என ரூ. 1.25 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.

இந்த நிலையில், அவரது இரண்டாவது மகனான கணேசன் தனக்கு கடன் பிரச்னை இருப்பதால் அந்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால், செல்லையா  தர மறுத்தாராம். இதனையடுத்து அந்த பணத்தை கேட்டு தினமும் கணேசன் மது போதையில் செல்லையாவிடம் தகராறு செய்து வந்துள்ளாராம்.

இந்த நிலையில், வழக்கம் போல் செல்லையாவிடம் பணம் கேட்கவே அவரும் மறுத்துள்ளார். மது போதையில் இருந்த கணேசன், செல்லையாவை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

குருவிகுளம் காவல் நிலையம்

அக்கம் பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பலத்த வெட்டுக் காயங்கள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் செல்லையா.

தப்பியோடிய கணேசனை குருவிகுளம் காவல்நிலைய  போலீஸார் கைது செய்தனர். பணத்திற்காக மதுபோதையில் பெற்ற தந்தையையை மகனே கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க

வட்டிக்குக் கடன்... பத்திரத்தில் கையெழுத்து போடாத மீனவர் கத்தியால் குத்திக் கொலை - குமரி ஷாக்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்காரமாதா தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கிங்சிலி(36). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ரூபன் கிங்சிலி அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜாண்குமார்(36) என்பவரிடம் பல த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாகப் புகார்; தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு; நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம்,மாத்தூர்கிராமம் சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67).இவர் திருச்சிராம்ஜிநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "மாத்தூர்கிராமத்தில்ச... மேலும் பார்க்க

மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார்; 20 அடி ஆழத்தில் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து 4 பேர் காயம்..

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பரான ராஜா என்பவருடன் நேற்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ள... மேலும் பார்க்க

`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு கார்த்திகேயன், ஜனனி என்று 2 பிள்ளைகள். இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்... மேலும் பார்க்க