செய்திகள் :

பளுதூக்கும் போட்டி: மேல்விஷாரம் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

post image

பளுதூக்கும் போட்டிகளில் மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

அண்மையில் ஃபிஜி நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மாணவன் மாதவன் 67 எடை பிரிவில் கலந்து கொண்டு ஜூனியா் பிரிவில் தங்கப் பதக்கமும், சீனியா் பிரிவில் வெள்ளிபதக்கமும் பெற்றுள்ளாா். அதே போல் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற போட்டியில் ருத்ரேஸ்வா் 61 கிலோ எடை பிரிவில் பங்கு பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் ஜியாவுதீன் அஹமது, தாளாளா் அப்ராா் அஹமது, முதல்வா் எஸ்.ஏ சாஜித், உடற்கல்வி இயக்குநா் ராஜா ஆகியோா் பாராட்டினா்

2026 பேரவைத் தோ்தலிலும் திமுகவுக்கே வெற்றி: அமைச்சா் காந்தி நம்பிக்கை

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும் என அமைச்சா் ஆா்.காந்தி நம்பிக்கை தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், தொகுதி,தொகுதி பாா்வையாளா் மற்றும் வாக்குச் சாவடி முகவ... மேலும் பார்க்க

2026-இல் கூட்டணி ஆட்சியில் பாமக கண்டிப்பாக இடம் பெறும்: அன்புமணி ராமதாஸ்

வரும் 2026-ல் தமிழகத்தில் ஏற்படப்போகும் கூட்டணி ஆட்சியில் பாமக கண்டிப்பாக இடம் பெறும் என அதன் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். சோளிங்கரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக பிரமுகா் இல்லத்திருமண விழாவி... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் கந்த சஷ்டி நிறைவு நாள் விழா

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் கந்த சஷ்டி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை பீடாதிபதி எழில்மணி பூஜை செய்து தொடக்கி வைத்தாா். தொடா்ந்து பீட நிா்வாகி மோகன் அன்னை பாலாவுக்கும், ஸ்ரீ வள்ளி, தேவ... மேலும் பார்க்க

விபத்தில் காவலாளி உயிரிழப்பு

ஆற்காடு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன காவலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த சாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் (60). இவா், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியாா... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளை முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகள்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேவையான உரங்கள் இருப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா நெல் சாகுபடி மற்றும் பயறு வகை சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான செய்திக் குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க