செய்திகள் :

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

post image

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசியலமைப்பால் அவர் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பது, அவர் ஒரு சிறந்த வழக்குரைஞர் என்பதைக் காட்டுகிறது.

மாநிலங்களவையின் செயல்திறனை மேம்படுத்த அவர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். சமூகத்துக்கு சேவை செய்ய விரும்பும் அவர், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வையும் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:விராட் கோலிக்கு பாரத ரத்னா? `சின்ன தல’ கோரிக்கை!

புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?

புதிய போப் பதினான்காம் லியோ பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாலாகாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பாட்டனும் கலந்... மேலும் பார்க்க

சசி தரூரைச் சுற்றி நகரும் அரசியல்! கேரள காங். சொல்வதென்ன?

மத்திய அரசு நியமித்துள்ள எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இணைக்கப்பட்டுள்ளதில் காங்கிரஸ் தலைமைக்கு விருப்பமில்லையா? என்று தேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.வெளிநாடுகளுக்... மேலும் பார்க்க

துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து!

துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது. இதில், மும்பை ஐஐடியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத் திட்டங்கள், எதிர்கால மேம்பா... மேலும் பார்க்க

துருக்கி ஆப்பிள்களை மக்களும் புறக்கணிக்கின்றனரா?

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு... மேலும் பார்க்க

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நாளை(மே 19) அவர் விமானம் மூலம் ஐரோப்பா செல்லும் அவர் மேற்கண்ட 3 நாட்டு தலைவர்களுடன்... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெள... மேலும் பார்க்க