பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
குடியரசு நாள் விழா: காங்கிரஸ் வாழ்த்து!
குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார் மல்லிகார்ஜுன் கார்கே. அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர்.
“என் சக குடிமக்களுக்கு, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் உங்கள் ஒவ்வொருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தாண்டு நாம், இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாக விளங்கும் இந்திய அரசமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.