குட் பேட் அக்லி ரூ. 250 கோடி வசூல்!
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் இரண்டாவது வார இறுதி நாள்கள் முடிவில் மொத்தம் ரூ.260 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கோடை விடுமுறை தொடங்கி இருக்கும் சூழலில், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகாததால் குட் பேட் அக்லி படத்துக்கான கூட்டம் குறையாமல் இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 200 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரண்டாவது வார இறுதிநாள்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில், ரூ. 260 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் ரூ. 150 கோடி வசூலித்து, அதிகம் வசூலித்த அஜித் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. வெளிநாடு வசூலுடன் சேர்த்து 11 நாள்களில் மொத்தம் ரூ. 260 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
கோடை விடுமுறை தொடங்கியிருக்கும் சூழலில், எளிதில் ரூ. 300 கோடி வசூலைக் கடக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.