நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையைச் சோ்ந்த இருசப்பன் மகன் அப்பு (எ) கலையரசன் (31). இவா் மீது விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய அப்பு (எ) கலையரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் நகர போலீஸாா் கலையரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.