செய்திகள் :

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேசத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கைது

post image

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்சைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தில்லி போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேச நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி இந்த பகுதிகளில் தங்கி சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரித்து வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் வந்தது எப்படி? இவ்வளவு நாள்கள் எப்படி தங்கியிருந்தார்கள்? இவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த நபர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தில்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் இருப்பதால் அவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

இவர்கள் இங்கு தங்கி இருந்த நாள்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தார்களா அல்லது சதி செயலுக்காக சென்னை வந்தார்களா என பல்வேறு கோணங்களில் தில்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்க தேச நாட்டைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!

தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வர... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் வழ... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இரண்டாம் நாளாக இன்றும் நடத்தப்படுகிறது.சென்னையில் ஏற்கனவே முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 2... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மே. 13-ல் தீர்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து... மேலும் பார்க்க

காவலர்களுக்கான வார விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் சில வேளைகளில் வார விடுமுறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. அது உண்மைதான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.தமிழ்நாடு சட்டப் பேரவையி... மேலும் பார்க்க