செய்திகள் :

குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ அறிவிப்பு!

post image

குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.

இதையும் படிக்க: சீனாவில் வெளியாகும் மகாராஜா!

தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ இன்று(நவ. 15) மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சைபர் மோசடியில் ரூ. 10 கோடியை இழந்த முதியவர்!

தில்லி ரோஹினி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 70 வயது பொறியாளர் சைபர் கிரைம் மோசடி மூலம் ரூ. 10 கோடியே 30 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.காவல் துறை அதிகாரிகளின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொறியாளர்... மேலும் பார்க்க

எங்கெல்லாம் இன்று கனமழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று(நவ. 15) 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மன்னார் வளைகுடா மற்று... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் முறை தொடக்கம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கும் நடைமுறை இன்றுமுதல்(நவ. 15) தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடாகக் கூட... மேலும் பார்க்க

15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.மேலும், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் தமிழகம் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக... மேலும் பார்க்க

4 நாள்களுக்குப் பிறகு உயர்ந்த தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களுக்குப் பிறகு இன்று(வெள்ளிக்கிழமை) சற்றே உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் அதிரடியாகக் குறைந்தது. கடந்த 4 நாள்களில... மேலும் பார்க்க