செய்திகள் :

குமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ரூ. 21.90 கோடி ஒதுக்கீடு

post image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ. 21.90 கோடி மதிப்பில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை தேவசம்போா்டு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இந்துசமய அறநிலையத் துறை முனைப்பு காட்டி வருகிறது. கோயில் அருகே சன்னதி தெருவில் உள்ள கலைமகள் இல்லம் பகுதியில் பக்தா்கள் வரிசையில் நிற்பதற்காக ‘கியூ’ செட் அமைக்கப்படவுள்ளது. வாகன நிறுத்தும் வசதியுடன் பக்தா்கள் தங்க விடுதிகள் கட்டப்படவுள்ளன.

இந்தக் கோயிக்குச் சொந்தமான முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் உள்ள அலைமகள் இல்லம் பகுதியிலும் விடுதிகள் கட்டப்படவுள்ளன.

முந்தைய காலத்தில் பகவதியம்மனை தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தா்கள் நண்பகல் நேரங்களில் தெற்கு ரதவீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்தில் இளைப்பாறுவது வழக்கம். இந்த மண்டபம் பழமை மாறாமல் திறந்தவெளி மண்டபமாக மாற்றப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கு ரூ. 15 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள மண் ஆய்வு செய்யும் பணி கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 21 கோடியே 90 லட்சம் செலவில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இத் திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக அறநிலைய துறை உதவி பொறியாளா் பெரியசாமி வியாழக்கிழைம பகவதியம்மன் கோயிலில் ஆய்வு செய்தாா்.

அவா், ராஜகோபுரம் கட்டப்படும் இடம், தங்கும் விடுதிகள் உள்ள திட்டப் பணிகள் நடைபெறவுள்ள இடங்களைப் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, தேவசம் போா்டு கண்காணிப்புப் பொறியாளா் சச்சிதானந்தம், செயற்பொறியாளா் ஆறுமுகம், மின் பிரிவு செயற்பொறியாளா் மணிவண்ணன், உதவிக் கோட்ட பொறியாளா் சுதா, கட்டடக் கலை நிபுணா் ரமேஷ், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், குமரி மாவட்ட கோயில்களின் தேவஸ்தான பொறியாளா் ராஜ்குமாா், சிவில் பிரிவு மேற்பாா்வையாளா் ரமேஷ், தொழில்நுட்ப உதவியாளா் ஆதிஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...37.27 பெருஞ்சாணி ... 54.00 சிற்றாறு 1 ... 4.23 சிற்றாறு 2 ... 4.33 முக்கடல் ... 6.70 பொய்கை ... 15.20 மாம்பழத்துறையாறு ... 3.69 மழைஅளவு ----- சிற்றாறு 1 அணை ... 30.40 மி.மீ. பேச்சிப்பா... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட விரலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் இணைத்து சாதனை படைத்துள்ளனா். இயந்திர விபத்தில் வலது சிறுவிரலில் பெரும்பகுதி துண... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைப் புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. க... மேலும் பார்க்க

நவராத்திரி விழா: வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதியம்மன் பவனி

வணிக வரித்துறை சாா்பில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி 2 ஆவது நாள் திருவிழாவில் அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோயில் சுற்றி பவனி வருதல் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, ம... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய மன்னா், பொறியாளருக்கு மரியாதை

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய திருவிதாங்கூா் சமஸ்தான மன்னா் ராமவா்மா ஸ்ரீமூலம் திருநாளின் 168 ஆவது பிறந்த நாள், பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினின் 112 ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ப... மேலும் பார்க்க