நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட விரலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் இணைத்து சாதனை படைத்துள்ளனா்.
இயந்திர விபத்தில் வலது சிறுவிரலில் பெரும்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, அவசர சிகிச்சை நிபுணா் டெரின் முதலுதவி செய்து, எலும்பியல் நுண்குழல் (மைக்ரோவாஸ்குலா்) அறுவை சிகிச்சை நிபுணா் டால்டன் ஜாண்ரோஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து விரலை இணைத்தனா்.
நோயாளியின் கைமூட்டு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நாளம் நாா் (ரத்த குழாய்) மூலம் விரலில் ரத்த ஓட்டம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற அறுவை சிகிச்சைகள் மருத்துவா்களின் அா்ப்பணிப்பான மருத்துவ சேவைகள், சிறப்பு கவனிப்பு மூலம் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.