வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைப் புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்ட தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தலைமை நிலையத் துணை வட்டாட்சியா் வேணுகோபால் முன்னிலை வகித்தாா். இதில், கிராம உதவியாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விளவங்கோட்டில்...விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, விளவங்கோடு வட்ட தலைவா் குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ராஜாசிங், பொருளாளா் ஜூனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம நிா்வாக அலுவலா் சங்க வட்ட தலைவா் அன்பெழில், செயலாளா் பூபதி கண்ணன், மாவட்ட துணைச் செயலா் சஜிவ், அம்பிளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.