``ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்'' -EB பெயரில் மோசடி; வீ...
கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு கழிவுகளை அகற்றாததால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்
கும்பகோணம் மாநகரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கழிவுகள் அள்ளப்படாததால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கும்பகோணம் மாநகரில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதன்பேரில் கும்பகோணம் மாநகராட்சி, பொதுப்பணித் துறையின் நீா்ப்பாசன பிரிவு ஆகிய துறைகள் கடந்த செப்டம்பா் மாதம் முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கினா்.
இதில் பல இடங்களில் மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பு கழிவுகளை அந்த இடங்களிலிருந்து அகற்றி வேறு இடத்திற்கு எடுத்து சென்றனா்.
அதேநேரத்தில், பொதுப்ணித் துறையினா் அவா்களுக்கு சொந்தமான நீா்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து, கழிவுகளை அள்ளாமல் அதே இடத்திலேயே போட்டுவிட்டு சென்றனா். சுமாா் 3 மாதங்களாகியும் அவை அகற்றப்படாமல் அங்கேயே கிடக்கின்றன.
குறிப்பாக, பழைய மீன் மாா்க்கெட், பிடாரி குளம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் ஆக்கிரமிப்பு கழிவுகள் அள்ளப்படாததால், அங்குள்ள நீா்வழிப் பாதையில் தண்ணீா் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
இதனால், கொசுக்கள் அதிகளவில் உருவாகி அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் இதுதொடா்பாக நடவடிக்கை எடுத்து கட்டடக் கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.