TVK : 'அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்கள் கூடாது!' - தொண்டர்களுக்கு விஜய்யின் 12 ...
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் குறைந்தபட்ச கல்வித்தகுதியுடன் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதற்காக, கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக எழுத்து தேர்வு நாளை(சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. தேர்வையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மையங்களுக்கு வினாத்தாள்களை அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. அதேபோல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்தும் வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரே நாளில் தாயகம் திரும்பிய 5,000 ஆப்கன் குடும்பங்கள்!
கண்டெய்னர் வாகனங்களுக்கு பதில் தனியார் பேருந்துகளில் அனுப்பப்படுவதால் வினாத்தாள்கள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. தற்போது இதற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை. தேர்வர்கள் அச்சப்படத் தேவையில்லை.
தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்துச்சென்றது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.