செய்திகள் :

குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

சென்னை: கஷ்டப்பட்டு பணி பெற்றவர்கள், கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும். குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு எனவும் காவலர்களுக்கு சட்டம்தான் முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (நவ.27) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள் 2,599 பேர்(ஆண்கள் 1819, பெண்கள் 780), சிறைத்துறை காவலர்கள் 86 பேர்(ஆண்கள் 83, பெண்கள் 3)மற்றும் தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு 674 பேர் என தேர்வு செய்யப்பட்டுள்ள 3,359 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மீதமுள்ள 2359 பேர்களுக்கும் அவர்கள் சார்ந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு, மாவட்டங்கள், சரகங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள அந்தந்த காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாக பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களில் சிறைத்துறை காவலர்களுக்கு டிசம்பர் 2 முதல் திருச்சியில் உள்ள மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்திலும், இரண்டாம் நிலை காவலர்களுக்கு டிசம்பர் 4 முதல் தமிழ்நாட்டில் உள்ள 8 காவலர் பயிற்சி பள்ளிகளிலும் அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இதையும் படிக்க |தனுஷ் வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிகழ்ச்சியில் தேர்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கஷ்டப்பட்டு பணி பெற்றவர்கள், கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும். ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக தமிழக காவ் துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காவலர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு எனவும் காவலர்களுக்கு சட்டம்தான் முக்கியம். மக்களின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல் துறையிடம்தான் உள்ளது.

கடைநிலை காவலர்களிடம் கூட உயர் அதிகாரிகள் நண்பர்களாக இருக்க வேண்டும்.

குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும். மக்களுக்கு உங்கள் மீது பயம் இருக்கக் கூடாது, மரியாதைதான் இருக்க வேண்டும என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலி!

மின்சாரம் பாய்ந்து ஊராட்சியில் பணிபுரியும் பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலியாகினர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின்விளக்கு கம்பம் நடுவதற்காக, வேப்... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்!

ஆம் ஆத்மியில் இருந்து பாஜவில் இணைந்த கைலாஷ் கெலாட், முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், இன்று(நவ. 27) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.மேற்கு தில்லியி... மேலும் பார்க்க

அயலி இணையத் தொடர் நாயகியின் புதிய சீரியல்!

அயலி இணையத் தொடர் நாயகியின் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அயலி இணையத் தொடரில் தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை அபி நட்சத்திரா. பெரிய திர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடல் சீற்றம்: முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை கடற்கரைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பாதுக... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் முதல்முறையாக இடம்பெறும் தெலுங்கு தேசம்!

அமராவதி: ஆந்திரத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், மாநிலங்களவையில் முதல்முறையாக தெலுங்கு தேசம் இடம்பெறும் என எதிர்... மேலும் பார்க்க

மண் அரிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியான கீழத்தோட்டம் கடல் பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெரு... மேலும் பார்க்க