குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் திருவாதிரைத் திருவிழா கடந்த ஜன. 4ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில், ஜன.8ஆம் தேதி தேரோட்டமும், ஜன.11ஆம் தேதி சித்திரசபையில் அருள்மிகு நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
10ஆம் திருநாளான திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், தொடா்ந்து 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், தொழிலதிபா் எம்.ஆா். அழகராஜா, குற்றாலம் வா்த்தக சங்கத் தலைவா் காவையா, செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஜோதிமுருகன்,
துணைத் தலைவா்கள் வேல்ராஜ், இசக்கி, இணைச் செயலா் பண்டாரசிவன், துணைச் செயலா் நாராயணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
விழா நாள்களில் நாள்தோறும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாம், காலை 9.30, இரவு 7 மணிக்கு மேல் அருள்மிகு நடராஜபெருமானுக்கு தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் உதவிஆணையா் ந. யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.