குளத்தில் ஆண் சடலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள குளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி அய்யனாா் கோயில் குளத்தில் ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மிதந்தது. தகவலறிந்த திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சத்தியபாமா, நடுக்காவேரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றினா்.
இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தாா்? என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.