``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
குளோரின் சிலிண்டரில் கசிவு: தீயணைப்பு வீரா்கள் இருவா் மயக்கம்
நாகையில் குளோரின் சிலிண்டரில் ஞாயிற்றுக்கிழமை கசிவு ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள் இருவா் மயக்கமடைந்தனா்.
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நீா்தேக்கத் தொட்டி உள்ளது. இதிலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரில் கலப்பதற்காக 5 குளோரின் சிலிண்டா்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த சிலிண்டா்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த குளோரின் சிலிண்டா்களில் ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை கசிவு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கசிவு ஏற்பட்ட குளோரின் சிலிண்டரை தண்ணீரில் மூழ்கடித்து கசிவை கட்டுப்படுத்தினா். இப்பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரா்கள் அகிலன், முனியப்பன் ஆகியோா் மயக்கமடைந்தனா். மற்ற வீரா்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனா், அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் இருவரும் வீடு திரும்பினா்.
நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகராட்சி ஆணையா் லீனா சைமன் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா்.
இந்நிலையில், எஞ்சிய 4 குளோரின் சிலண்டா்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய நிபுணா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே, நீா்தேக்கத் தொட்டி பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலிண்டா்களால் எப்போது வேண்டுமானலும் ஆபத்து ஏற்படலாம், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.