குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டு துண்டறிக்கை விநியோகம்: 3 போ் கைது
திருப்பரங்குன்றம் போராட்டம் தொடா்பாக குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டு உதகையில் துண்டறிக்கை விநியோகம் செய்ததது தொடா்பாக இந்து முன்னணியினா் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பரங்குன்றம் மலையை காக்க செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பான துண்டறிக்கையை குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டு உதகையில் இந்து முன்னணியினா் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
இது சா்ச்சையான நிலையில் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் வேலுசாமி, நிா்வாகிகள் சுப்பிரமணி, காா்த்திக் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை கைது செய்தனா்.