`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த த...
கூகுள் மேப்பை நம்பிச் சென்ற போலீஸ் குழு; தாக்கி சிறைபிடித்த நாகலாந்து உள்ளூர்வாசிகள்; நடந்தது என்ன?
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று, கூகுள் மேப்பின் (Google Map) தவறான வழிகாட்டுதலால் வழி தவறி வேறு இடத்துக்குச் சென்று, அப்பகுதி மக்களால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது.
முன்னதாக, அஸ்ஸாமின் 16 பேர் கொண்ட ஆயுமேந்திய போலீஸ் குழு நேற்று குற்றவாளியைத் தேடிப் புறப்பட்டது. கூகுள் மேப்பின் வழிகாட்டுதலின்படி சென்றுகொண்டிருந்த போலீஸ் குழு, அஸ்ஸாமில் இருப்பதாக மேப்பில் காட்டிய தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தது. ஆனால், அது நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டம்.
ஆயுதங்களுடன் வந்திருந்த போலீஸ் குழுவைக் கண்ட அப்பகுதி உள்ளூர்வாசிகள் அவர்களைத் தாக்கி இரவோடு இரவாக சிறைபிடித்துவைத்தனர். பின்னர், அஸ்ஸாமிலுள்ள போலீஸார் இதுபற்றி அறிந்ததும், உடனடியாக நாகலாந்து காவல்துறைக்குத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அங்கு வந்த நாகலாந்து உள்ளூர் காவல்துறையினர், பிடித்துவைக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் அதிகாரிகளை மீட்டுச் சென்றனர்.
இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ``பிடித்துவைக்கப்பட்டிருந்த 16 போலீஸ் அதிகாரிகளில், மூன்று பேர் மட்டுமே சீருடையில் இருந்தனர். மற்றவர்கள் சிவில் உடையில் இருந்தனர். இதனால் குழப்பமடைந்த உள்ளூர்வாசிகள், போலீஸ் குழுவைத் தாக்கினர். இறுதியில், நாகலாந்து போலீஸார் வந்து மீட்டனர். முதலில் 5 பேரை மட்டும் விடுவித்த உள்ளூர்வாசிகள், மறுநாள் காலையில் மீதமிருந்த 11 பேரையும் அனுப்பி வைத்தனர்" என்று கூறினார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...