``ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்'' -EB பெயரில் மோசடி; வீ...
கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார், இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
குருகிராம் மாவட்டத்தில் இருந்து பரேலி நோக்கி சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்காக மூன்று இளைஞர்கள் கூகுள் மேப்பை பின்பற்றி காரில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ராம்கங்கா ஆற்றுக்கு குறுக்கே சேதமடைந்த மேம்பாலத்தில் வழி இருப்பதாக கூகுள் மேப்பில் காட்டியதால், வேகத்தை குறைக்காமல் முன்னோக்கிச் சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
சுமார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே கார் விழுந்து நொறுங்கியுள்ளது. இரவு நேரம் என்பதால் விபத்து குறித்து யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பாலத்தின் கீழ் நொறுங்கிக் கிடந்த காரை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நிலையில் கிடந்த மூன்று இளைஞரின் உடல்களையும் மீட்ட காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் மிக கனமழை தொடங்கும்!
இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:
“இந்தாண்டு தொடக்கத்தில் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால், கூகுள் மேப்பில் இந்த பாலம் சேதமடைந்தது குறித்து அப்டேட் செய்யவில்லை. இதனால் விபத்து நேரிட்டுள்ளது” என்றார்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ள நிலையில், மூன்றாவது நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், பாலத்தில் தடுப்புகள் வைத்து எச்சரிக்கை பலகை வைக்காதது விபத்துக்கு காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.