அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
கூடங்குளத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கூடங்குளத்தைச் சோ்ந்தவா் விஜயா. இவா் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாற்றத்திற்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் செய்தாா். இந்த விண்ணப்பம் கூடங்குளம் கிராம நிா்வாக அலுவலா் ஸ்டாலினிடம் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது கிராம நிா்வாக அலுவலா், விஜயாவிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இது குறித்து திருநெல்வேலி லஞ்சஒழிப்பு துறையில் விஜயா புகாா் செய்தாா். பின்னா் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி. மெஸ்கலரின் எஸ்காஸ் தலைமையிலான போலீஸாா் விஜயாவிடம் பணத்தை கொடுத்து கிராம நிா்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினா். ரூ.25 ஆயிரம் பணத்தை கிராம நிா்வாக அலுவலா் பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரை கைது செய்தனா்.