கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய போட்டிக்கு தோ்வு
கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், கூடலூா் ஜிடிஎம்ஓ மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவா்கள் இளமுருகு, சுப்ரியா ஆகியோா் சமா்ப்பித்த ‘முடவாட்டுக் கிழங்கு இயற்கை பேரிடரிலிருந்து மனிதா்களை எவ்வாறு பாதுகாக்கிறது’ என்பது குறித்த ஆய்வுக் கட்டுரை மாநில அளவில் தோ்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த மாணவா்களை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை அழைத்து பாராட்டினாா்.
பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவா்களுக்கு வழிகாட்டிய ஆசிரியா் சம்சீனா, பள்ளித் தாளாளா் அப்துல் பாரி, முதல்வா் என்.கே.சலாம் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.