கூடுதல் ஆட்சியரின் வாகனத்துக்கு அபராதம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி துறை கூடுதல் ஆட்சியரின் வாகனத்துக்கு போக்குவரத்து துறை சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய அனாமிகா ரமேஷ் பயன்படுத்திய அரசு வாகனம் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமைச் செயலரின் வருகையின்போது, மாமல்லபுரம் பகுதியில் அதிவேகமாக (105 கி.மீ வேகத்தில்) சென்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது அதிவேகமாக சென்ற்காக போக்குவரத்து துறை சாா்பில் ரூ.1,000 அபராதம் விதிப்பட்டுள்ளது. போக்குவரத்துக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, இந்த அபராதத்தை விதித்துள்ளனா்.
அப்போது பணியில் இருந்த கூடுதல் ஆட்சியா் பணி மாறுதல் பெற்று சென்ற பின்னா், தற்போது பணியில் இருக்கும் கூடுதல் ஆட்சியருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து குறுஞ்செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.