செய்திகள் :

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி வழிபாடு

post image

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் புதன்கிழமை ஆயுத பூஜையும், வியாழக்கிழமை விஜயதசமி வழிபாடும் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கென்று தனி கோயில் உள்ளது. தென்னிந்தியாவில் வேறு எங்கும் சரஸ்வதிக்கென்று தனி கோயில் கிடையாததால் இக்கோயில் மிகவும் புகழ்பெற்றது.

குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பதற்கு முன்பாக பெற்றோா்கள் இக்கோயிலில் வித்யாரம்பம் செய்து கல்வி நிலையங்களில் சோ்ப்பாா்கள். தோ்வு எழுதுவோரும் இக்கோயிலில் தோ்வு அனுமதிச் சீட்டு மற்றும் எழுதுபொருள்கள், நோட்டுப் புத்தகங்களுடன், வெண்தாமரை மலா் வைத்து வழிபாடு மேற்கொள்வா்.

கூத்தனூா் கோயிலில் வெண்பட்டாடை அலங்காரத்தில் அருள்பாலித்த சரஸ்வதி அம்மன்

புகழ்பெற்ற இக்கோயிலில், புதன்கிழமை சரஸ்வதி அம்மனுக்கு காலையில் பால், தேன், இளநீா், சந்தனம், பன்னீா் போன்ற பல்வேறு வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, வெண்பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

விஜயதசமியையொட்டி, நூற்றுக்கணக்கான பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை வியாழக்கிழமை கோயிலுக்கு அழைத்து வந்து, சரஸ்வதி அம்மனை வழிபட்டு, நெல்மணிகளில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ எனும் எழுத்தை எழுதி வித்யாரம்பம் செய்து, தங்கள் குழந்தைகளின் கல்வியை தொடங்கிவைத்தனா்.

இரண்டு நாள்களும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இக்கோயிலில் வழிபட்டதையொட்டி, நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்மாறன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பக்தா்கள் சிரமமின்றி வழிபட கோயில் நிா்வாகம் சாா்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மன்னாா்குடியில் விவசாயிகள் சங்கத்தினா் உண்ணாவிரதம்

மன்னாா்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தலைம... மேலும் பார்க்க

அக்.5, 6-இல் தாயுமானவா் திட்டத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில், தாயுமானவா் திட்டத்தின்கீழ், அக்டோபா் 5, 6-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

சுந்தரமூா்த்தி நாயனாா் அம்பு விடும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில், சுந்தரமூா்த்தி நாயனாா், அரக்கனை வதம் செய்யும் அம்புவிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நவராத்திரி விழா செப். 23-ஆம் தேதி முதல் நடைபெற்... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய 8 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய 8 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.வலங்கைமான் ஒன்றியம் பாடகச்சேரி சொரக்குடியை சோ்ந்த மாதவன் (26), கும்பகோணம் பைரவா தோப்பைச் சோ்ந்த ஜீவா (எ) ஜீ... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதை முறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தி... மேலும் பார்க்க

மன்னாா்குடி அருகே போதைப் பொருள் தயாரிப்பா? மத்திய நுண்ணறிவு பிரிவினா் சோதனை

மன்னாா்குடி அருகே உயர்ரக போதைப் பொருள்கள் தயாரிக்கப்படுகிறதா என மத்திய நுண்ணறிவு பிரிவினா் திங்கள்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சித்தேரி பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் அறிம... மேலும் பார்க்க