செய்திகள் :

கூலி - தாய்லாந்து சென்ற ரஜினி!

post image

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் ஜெய்ப்பூரில் அமீர் கானுடன் இணைந்து ரஜினி நடித்தார்.

பான் இந்திய வணிகத்திற்காக படத்தில் பல மாநில நடிகர்களும் இணைந்து நடித்து வருவதால் கூலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா

சமீபத்தில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், ”கூலியின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜன. 13 - ஜன. 28 வரை நடைபெறுகிறது.” என்றார்.

இறுதிப் போட்டிக்கு தேர்வானது பார்சிலோனா!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா - அத்லெடிக் பில்பாவ் மோதிய அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-0 என அபராமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பார்சிலோனா அணி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போ... மேலும் பார்க்க

ரஜினியின் பயோபிக்கை எடுக்க ஆசை: ஷங்கர்

நடிகர் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க ஆசை இருப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்ப... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.09.01.2025மேஷம்:இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை... மேலும் பார்க்க

டாமி பால், ஜெஸிகா பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளா்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோா் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.ஆட... மேலும் பார்க்க

சிட்னி ‘திருப்தி’; இதர நான்கும் ‘மிக நன்று’ - ஆஸி. ஆடுகளங்களுக்கு ஐசிசி மதிப்பீடு

பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 5 மைதான ஆடுகளங்களின் மதிப்பீட்டை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது.இதில் முதல் 4 ஆட்டங்கள் நடைபெற்ற ப... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா

மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை தகுதிபெற்றனா்.முன்னதாக முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஹெச்... மேலும் பார்க்க