செய்திகள் :

கெங்கையம்மன் கூழ்வாா்த்தல் திருவிழா

post image

அரக்கோணம்: காவேரிபாக்கம் அடுத்த உப்பரந்தாங்கலில் கெங்கையம்மனுக்கு கூழ் வாா்த்தல் திருவிழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் கூழ்வாா்த்தல் விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவை முன்னிட்டு கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரங்களும் நடைபெற்றன. தொடா்ந்து பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது.

இதில், விரதம் இருந்த பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், முதுகில் அலகு குத்தியும், அலகு குத்தியபடி அந்தரத்தில் தொங்கியபடியும், மேலும் டிராக்டா், வேன்களை இழுத்தப்படியும் ஊா்வலமாக வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இதனை தொடா்ந்து அம்மன் சிரசு ஊா்வலம் வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது. பின்னா் நாட்டுப்புற கலைஞா்களின் நாடகம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ஊா் நாட்டாண்மைகாரா்கள், விழாக்குழுவினா், கிராம இளைஞா்கள் செய்திருந்தனா்.

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி

ஆற்காடு: அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அமைப்பாா் என முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா். ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், சமூக ஆா்வலா் பொ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சிறைபிடித்து போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை விவசாயிகள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரக்கோணம் அடுத்த வீரநாராயணபுரம் மற்றும் வளா்புரம் பக... மேலும் பார்க்க

ஆசிரியருக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு

அரக்கோணம்: ஓரு வங்கியில் கடன் பெற்று சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி கடனை திருப்பிச் செலுத்தாத ஆசிரியரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து அரக்கோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரக்கோணம் அரசு நிதி உத... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.இது தொடா... மேலும் பார்க்க

22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

1,000 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். உணவுப் பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வாலாஜாபேட்டை அரசு மகள... மேலும் பார்க்க