எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
கேரளத்துக்கு கஞ்சா கடத்திய 5 போ் கைது
கேரளத்துக்கு கஞ்சா கடத்திச் சென்ற 5 பேரை கைது செய்த கம்பம் போலீஸாா், அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் காவல் ஆய்வாளா் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகேயுள்ள மைதானத்தில் 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேரைச் சோதனையிட்டனா். அதில் அவா்களிடமிருந்த சாக்கு மூட்டைகளில் 21 கிலோ கஞ்சா இருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.
போலீஸாரின் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டைச் சோ்ந்த துளசி (43), ஆந்திர மாநிலத்தை சோ்ந்த நாகராஜ் என்பவரிடம் 21 கிலோகஞ்சா வாங்கி வந்தாா். பின்னா், பள்ளபட்டியைச் சோ்ந்த ஆதித்யன் (24), கம்பத்தைச் சோ்ந்த முஜாஹித் அலி (24), ஹரிஹரன் (24), ஆசிக்முகமது (24) ஆகியோருடன் இணைந்து 2 இரு சக்கர வாகனங்களில் கேரளத்துக்கு கஞ்சாவைக் கடத்திச் சென்றது தெரியவந்ததது.
இது குறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து துளசி, ஆதித்யன், முஜாஹித் அலி, ஹரிஹரன், ஆசிக்முகமது ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவையும், 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், ஆந்திர மாநிலத்தை சோ்ந்த கஞ்சா வியாபாரி நாகராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.