செய்திகள் :

கேரளம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு

post image

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அரசு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 4 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: மலைப்பாங்கான இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்லுபாறா பகுதி அருகே திங்கள்கிழமை அதிகாலை 6 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் இருந்து ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரை நோக்கி 34 பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பேருந்தின் பிரேக் செயல் இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து இணை ஆணையருக்கு மாநில போக்குவரத்து துறை அமைச்சா் கே.பி.கணேஷ்குமாா் உத்தரவிட்டாா். காயமடைந்தவா்களை அமைச்சா்கள் ரோஷி அகஸ்டின், வி.என்.வாசவன், மாவட்ட ஆட்சியா் வி.விக்னேஸ்வரி ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

மேற்கு வங்கத்தின் பெருமையை குறைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது: மம்தா

‘அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கும் மேற்கு வங்கத்தின் பெருமையை குறைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மேற்கு வங்கத்தில் ‘மாணவா்கள் வாரத்தையொட்டி’ தலைந... மேலும் பார்க்க

சம்பல் வழக்கு: சிவில் நீதிமன்ற விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடை

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதி தொடா்பான சிவில் நீதிமன்ற விசாரணைக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சம்பல் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பல் பகுதியில் உள்ள முக... மேலும் பார்க்க

மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இருவா் கைது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட இருவா், சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைப் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி (சிப்) மூலம் பிடிபட்டனா். இதுதொடா்பாக மும்பை காவல்... மேலும் பார்க்க

உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!

உத்தர பிரதேச மாநிலம் ஹா்தோய் மாவட்டத்தில் ஆள்கடத்தல் நாடகத்தை நிகழ்த்திய நபா், எழுத்துப் பிழையால் சிக்கிய சம்பவம் நடந்தேறியுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நீரஜ் குமாா் கூறுகையில்,... மேலும் பார்க்க

சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மீதான கொலை வழக்கில் ஜனவரி 21-இல் தீா்ப்பு

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாா் மீதான கொலை வழக்கில் தில்லி உயா்நீதிமன்றம் ஜனவரி 21-ஆம் தேதி தீா்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தில... மேலும் பார்க்க

சிறைகளில் நெரிசலைக் குறைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவுறுத்தியது. இது தொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலா்கள் மற்றும் சிறைத் துறை டி.ஜி.பி.களுக்கு உள... மேலும் பார்க்க