செய்திகள் :

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

post image

கேரளத்தில் நடுக்கடலில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், கொச்சியில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த படகு மீது கப்பல் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இதில் படகும் மீன்பிடி வலையும் சேதமடைந்தன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடற்கரையிலிருந்து சுமார் எட்டு கடல் மைல் தொலைவில் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. கப்பல் மோதியதால் அவர்களின் படகும் மீன்பிடி வலையும் சேதமடைந்தன.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

சம்பவம் நடந்தபோது படகில் 49 மீனவர்கள் இருந்தனர். அவர்களில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. புகார்தாரர்கள் வியாழக்கிழமை காலை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சேதத்தை மதிப்பிட படகு மற்றும் மீன்பிடி வலை ஆய்வு செய்யப்படும்.

அதன் பிறகே அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார். மீனவர்கள் கரையை அடைந்த பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

A fishing boat was allegedly hit by a ship off Kochi coast on Wednesday evening, police said here.

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தின் உன்ஹெல் நாகேஷ்வர் நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புக்கு (ETFA) இடையே தடையற்ற வர்த்தக ... மேலும் பார்க்க

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.தங்கத்தின் விலை சமீபத்தில் அதிகளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், குடிமக்களிடையே அதி... மேலும் பார்க்க

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

துபை சர்வதேச மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை தேசத் துரோகிகள் கண்டு ரசித்ததாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா்உத்தவ் தாக்கரே புதன்கிழமை தெரிவித்தார். இதுகுற... மேலும் பார்க்க