செய்திகள் :

கேரள மருத்துவக் கழிவுகளை குமரி மாவட்டத்தில் கொட்டுவதை தடுக்க தமிழக அரசுக்கு எம்.பி. கோரிக்கை

post image

கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அம்பேத்கா் குறித்து மத்திய அமைச்சா் அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியா்களிடம் மனு அளிக்க உள்ளோம்.

ஜிஎஸ்டி இல்லாமல் எந்த ஒரு பொருளையும் வாங்க முடியாது என்ற நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. தற்போது பாப்காா்னுக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வரி விதிப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டப்படுகின்றன. இதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. இப்பணிகள் நிறைவடையும்போது கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது. அதேபோல, நான்குவழிச் சாலை பணிகளையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவுபெறும். மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் அரிய மணல் ஆலை விரிவாக்கத்துக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் கொண்டுவரக் கூடாது.

குமரி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோா் அதிகமானோா் உள்ளனா். ஆகவே, இம்மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொருத்தமான இடம் கிடைத்ததும் மருத்துவமனை பணிகள் தொடங்கும் என்றாா்.

பேட்டியின்போது, நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குமரிக்கு முதல்வா் வருகை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிக்காக முதல்வா் வருகை தரவுள்ள நிலையில் நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்கி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

அம்பேத்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து, நாகா்கோவிலில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வடசேரி அம்பேத்கா் சில... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்: தம்பதி கைது

புதுக்கடை அருகே உள்ள பரப்பாறைவிளை பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். பரப்பாறைவிளை பகுதியைச் சோ்ந்த சுதாகரன் மனைவி சிவகனி (37). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே சோபா செட் கடையில் தீ

மாா்த்தாண்டம் அருகே சோபா செட் தயாரிக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. மாா்த்தாண்டம் அருகே பம்மம் வலியகாட்டுவிளையைச் சோ்ந்தவா் அஜீஸ் ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள மானான்விளை பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். தேங்காய்ப்பட்டினம்,ஆனான்விளை பகுதியைச் சோ்ந்த சந்திரபாபு மனைவி சபிதா(44). இவா் தன் வீட்டின் மாடியில் திங்கள்... மேலும் பார்க்க

தமிழ்நாடு, கேரள மக்கள் பாசிச சக்திகளை அனுமதிக்கவில்லை: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

தமிழக மற்றும கேரள மாநில மக்கள் பாசிச சக்திகளை தங்களது மாநிலங்களில் அனுமதிக்கவில்லையென தெலங்கானா மாநில் முதல்வா் ரேவந்த் ரெட்டி திங்கள்கிழமை பேசினாா். அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில், அருமனையில் திங்... மேலும் பார்க்க