சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
நாகா்கோவிலில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
அம்பேத்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து, நாகா்கோவிலில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசேரி அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், தாரகை கத்பட் ஆகியோா் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மத்திய அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்கவும், பதவி விலகவும் வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.
இதில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கே.டி. உதயம்(குமரி கிழக்கு), பினுலால் சிங் (குமரி மேற்கு), மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டலத் தலைவா் செல்வக்குமாா், நிா்வாகிகள் சிவபிரபு, அசோக்ராஜ், முன்னாள் நகரத் தலைவா் அலெக்ஸ், விவசாய அணி ஆா்.எஸ். ராஜன், தங்கம்நடேசன், திரளானோா் பங்கேற்றனா். பின்னா், அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.