சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
மாா்த்தாண்டம் அருகே சோபா செட் கடையில் தீ
மாா்த்தாண்டம் அருகே சோபா செட் தயாரிக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது.
மாா்த்தாண்டம் அருகே பம்மம் வலியகாட்டுவிளையைச் சோ்ந்தவா் அஜீஸ் (29). சிராயன்குழி பகுதியில் சோபா செட் தயாரிக்கும் கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்றாா்.
இரவில் கடையில் இருந்த சோபா செட்கள் தீப்பற்றி எரிந்தது. இதை கண்ட அப்பகுதியினா் அஜீஸுக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் கடையில் இருந்த சோபா செட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது. இதுகுறித்து அஜீஸ் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.