செய்திகள் :

`கேள்வியே கேட்கக் கூடாதா?’ - வேல்முருகன் VS துரைமுருகன்; களேபரமான சட்டமன்றம்!

post image

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

நீர்வளத்துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெறுகையில் சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம்  சோளிங்கர் ஏரி மதகு அடைபட்டு பாசனத்திற்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து தர அமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்.

இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்த உடனே பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி), பவானி தொகுதியின் கோரிக்கையைக் குறிப்பிட்டு, "காவிரி நீரின் உபரி நீரானது அந்தியூர் – பவானி தொகுதியின் ஒரு பகுதி மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தப் பகுதி விவசாயிகள் சார்பாக உங்கள் இல்லத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தேன். அந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பை உருவாக்கி தருவீர்களா?" என்று கேட்டார்.

அமைச்சர் துரைமுருகன்

அதற்கு நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அந்தியூர் – பவானி தொகுதி குறைகளை கேட்பதற்கு அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார்" என்று வேல்முருகனின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தார்.

இதனால் கோபப்பட்ட வேல்முருகன், "மக்கள் பிரச்னைகள் குறித்து அவையில் கேள்வி எழுப்பக் கூடாதா? அமைச்சரின் பதிலுக்கு என்ன அர்த்தம்? " என்று விவாதத்தில் ஈடுபட்டார்.

உடனே துரைமுருகன், "என்ன சொல்லுங்க?" என்று அதட்டினார். "இதெல்லாம் ரொம்ப மோசமானது. கேள்வியே கேட்கக் கூடாதா?" என்றார் வேல்முருகன்.

வேல்முருகன் VS துரைமுருகன்
வேல்முருகன் VS துரைமுருகன்

இதனிடையே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "தம்பி வேல்முருகன் நீங்க இப்போது அனுமதியின்றி பேசுறதுதான் மோசமானது. நீங்கள் கேட்ட கேள்வியும் சரியானதுதான், அவர் சொன்ன பதிலும் சரியானதுதான். தேவையற்ற விவாதம் வேண்டாம் உட்காருங்கள். இப்போது உங்களுக்குப் பேச அனுமதியில்லை. உங்கள் நேரத்தில் பேசவும்" என்று ஆஃப் செய்துவிட்டார்.

"ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம்; விரைவில் உரிய சட்டம்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை கவின் ஆணவப்படுகொலை, திண்டுக்கல் ராமச்சந்திரன் என நாடுமுழுவதும் தினமும் ஆணவப்படுகொலைகள் சாதியின் பெயரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் வி... மேலும் பார்க்க

"கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையம்; தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாதா?" - சீமான் கண்டனம்

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக் ... மேலும் பார்க்க

"விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" -அதிமுக ராஜேந்திர பாலாஜி பதில்

Qசமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்" என்று பேசி கூட்டத்தில் தவெக கொடி அசைவதைப் பார்த்து, "இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என்று அதிமுக ... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: ``புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல்"- உதயநிதி சொன்ன அப்டேட்

2023ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட... மேலும் பார்க்க

`₹15,000 கோடி முதலீடு; 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு' -தமிழக அரசு அறிவிப்பு; foxcon நிறுவனம் மறுப்பு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ₹15,000 கோடி முத... மேலும் பார்க்க

``இந்தி மொழிக்கு தடையா? வதந்திகளைப் பரப்பாதீர்கள்" - TN Fact check

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களிலும் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், இரு... மேலும் பார்க்க