History of Internet: போர் தொழில்நுட்பம் முதல் 10G வரை! | Explained
கைகளில் உள்ள மின்சாரத்தால் பட்டாசு விபத்து! அமைச்சா் சி.வெ.கணேசன் பேரவையில் விளக்கம்
பட்டாசு ஆலை விபத்துகளுக்கு மனித உடலில் உள்ள மின்சாரமும் ஒரு காரணம் என தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சாத்தூா் தொகுதி உறுப்பினா் ரகுராமன், பட்டாசு ஆலை விபத்துகள் குறித்து கருத்து தெரிவித்தாா்.
அதற்கு அமைச்சா் சி.வெ.கணேசன் அளித்த பதில்:
விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு 10 அல்லது 20 போ்
உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் நலன் காக்கவும் பட்டாசு ஆலைக்குள் நேரில் சென்று ஆய்வு நடத்திய ஒரே முதல்வா் நமது தமிழக முதல்வா் மட்டும்தான்.
பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழப்போரின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவா் அறிவித்தாா்.
காற்றில், தண்ணீரில் மின்சாரம் இருப்பதுபோல மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. அதன் காரணமாக பட்டாசு ரசாயனத்தில் கைகளை வைத்து கலக்கும்போது சில நேரங்களில் தீ விபத்து ஏற்படுகிறது. அதை ஆய்வு செய்து விபத்துகளைத் தடுக்கவும், தொழிலாளா் நலன் காக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் அவா்.