”கைதிகளுடன் தனிமையில் இருக்கலாம்...” - சிறையில் திறக்கப்பட்ட ”பாலியல் அறை” - எங்கே தெரியுமா?
இத்தாலியில் சிறை கைதிகளுக்காக முதன்முதலில் "பாலியல் அறை" திறக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய உம்ப்ரியா பகுதியில் உள்ள சிறையில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது பெண் துணைவியுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிட அனுமதிக்கப்பட்டார்.
சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து வரும்போது கைதிகள் தங்களது துணையுடனோ அல்லது கூட்டாளியுடனோ நெருக்கமான சந்திப்புகளை நடத்த உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்திய இத்தாலிய அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இது நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜனவரி 2024-ல் வெளியிடப்பட்ட தீர்ப்பில் சிறைக் கைதிகள் வாழ்க்கைத் துணையுடனோ அல்லது நீண்ட கால கூட்டாளிகளுடனோ தனிப்பட்ட சந்திப்புகளுக்கு உரிமை பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர்களை கண்காணிக்க சிறை காவலர்கள் யாரும் இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நீதி அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதில் நெருக்கமான சந்திப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட கைதிகளுக்கு படுக்கை மற்றும் கழிப்பறையுடன் கூடிய தனி அறை வழங்கப்பட வேண்டும். இது இரண்டு மணி நேரம் வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முதன் முதலில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது துணையுடன் நேரத்தை செலவிட்டார். இதுகுறித்து உம்ப்ரியா குறைதீர்ப்பாளரான கியூசப் கபோரியோ கூறுகையில்,
பரிசோதனை நன்றாக முடிந்தது. அடுத்த சில நாட்களில் மற்ற சந்திப்புகள் இருக்கும் என்ற சிறையில் நடந்த முதல் நெருக்கமான சந்திப்பு குறித்து கூறினார். பின்னர் சம்பந்தப்பட்ட மக்களை பாதுகாக்க அதிகபட்ச தனியரிமையை பாதுகாப்பது அவசியம் என்றும் கூறினார்.