Shruti Haasan: "மக்கள் அப்படி நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல!" - ரஜினி குற...
கைது செய்யப்பட வேண்டிய நெதன்யாகுவுக்கு பாதுகாப்பு ஏன்? ஐ.நா. நிருபர் கேள்வி!
சர்வதேச நீதிமன்றத்தால் கைது செய்யப்பட வேண்டிய இஸ்ரேல் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதேன் என்று ஐ.நா. சிறப்பு நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஸா மீதான தொடர் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கடந்தாண்டு கைது ஆணை பிறப்பித்தது.
இந்த நீதிமன்றம் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு எந்தவொரு நாடும் அடைக்கலம் தரக்கூடாது; குறிப்பாக, நீதிமன்றத்தின் சட்ட, திட்டங்களை ஏற்றுக்கொண்டிருக்கும் நாடுகள் அதனைச் செய்யவே கூடாது.
ஆனால், கடந்த வாரம் அமெரிக்கா சென்ற நெதன்யாகு, இத்தாலி, கிரீஸ், பிரான்ஸ் நாடுகளின் வழியைப் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டார். இந்த 3 நாடுகளுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு உட்பட்டவை.
இருந்தபோதிலும், தங்கள் வான்பரப்பை நெதன்யாகு பயன்படுத்திக் கொள்ள 3 நாடுகளும் அனுமதித்துள்ளன. இதுகுறித்து, ஐ.நா. அவையின் சிறப்பு நிருபர் ஃபிரான்செஸ்கா அல்பானீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலையும், அதன் மனித உரிமை மீறல்களையும் வெளி உலகத்துக்கு தெரியப்படுத்துவதில் பிரான்செஸ்கா முக்கிய பங்காற்றி வருகிறார்.
இதையும் படிக்க:பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா! நாசாவின் உற்சாக வரவேற்பு!