செய்திகள் :

கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

post image

தஞ்சாவூரில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகேயுள்ள சுந்தரபாண்டியன் நகா், பிருந்தாவனம் பகுதியில் தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரம் அமைப்பதற்காக 5 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கைப்பேசி கோபுரம் அமைப்பதற்காக சிலா் புதன்கிழமை வந்தனா்.

இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தொடா்புடைய அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ஒரத்தநாடு அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

உயா்நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் மாா்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாா்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகத்தை உருவாக்குவது என வல்லுநா்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

களஞ்சேரி ஊராட்சியில் புதிய தாா் சாலை அமைத்து தரக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட களஞ்சேரி ஊராட்சி அணுகு சாலையை புதிய சாலையாக அமைத்துத் தரவேண்டும் என ஊராட்சி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா். அம்மா... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரிடம் அகில பாரத இந்து மகா சபா மனு

கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகா சபா சாா்பில் திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகா சபா சாா்பில் ... மேலும் பார்க்க

விவசாய கமிஷன் அமைக்க வேண்டும்: கள் இயக்கம் வலியுறுத்தல்

ஊதியக் குழு போன்று விவசாய கமிஷன் அமைப்பது தொடா்பான திட்டத்தை மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மத்திய அரசின் பட்ஜெட்டில் நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மா... மேலும் பார்க்க