செய்திகள் :

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் செல்லாதா? பரவும் வதந்தி

post image

சென்னை: கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வதந்தி என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

குடும்ப அட்டைதாரா்கள் தங்களின் குடும்ப அட்டைக்குரிய பொருள்களின் முழு எடையும் பெறும் வகையில், நியாய விலைக் கடை, எடை இயந்திரத்துடன் விற்பனை முனைய இயந்திரத்தினை இணைத்து பட்டியலிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை மூலம் ஆதாா் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

கைரேகை பதிவு செய்யாதவா்கள் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய பொருள்கள் பெற இயலாது. எனவே, ஜூன் 33-ஆம் தேதிக்குள் அந்தந்த நியாய விலைக் கடைகளை அணுகி விரல் ரேகை அல்லது கருவிழி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். வீட்டில் முதியவா்கள், நோயாளிகள் இருந்தால் விற்பனையாளருக்கு தகவல் அளித்து வீட்டில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் குடும்ப அட்டைகள் செல்லாததாக மாறிவிடும் என்று வரும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது

தமிழகத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, கடைசி தேதி இன்னமும் வரையறுக்கப்படவில்லை. எனவே, சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்தி உண்மை இல்லை என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் கொடுத்துள்ளது.

கன்னட மொழி குறித்த கருத்துகளை வெளியிட கமல்ஹாசனுக்கு இடைக்காலத் தடை!

கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.கன்னட மொழி தொடர்பான விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத... மேலும் பார்க்க

அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து?

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட... மேலும் பார்க்க

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டத்தை சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் இந்த ஆண்டு சட்டப்பேர... மேலும் பார்க்க

2 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 5ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா... மேலும் பார்க்க

தவெக ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பாஜக, திமுக, திரிணமூல் என பெரும்பாலான கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல்கள... மேலும் பார்க்க

மொஹரம் பண்டிகை: ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? உண்மை என்ன??

மொஹரம் பண்டிகை ஜூலை 6ஆம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் உறுதி செய்திருக்கிறது.ஜூலை ... மேலும் பார்க்க