இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ‘லேசா்’ காட்சி சோதனை
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் லேசா் காட்சி சோதனை நடைபெற்றது.
இந்த ஏரியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக் கு முன்னா் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து ஏரியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போல, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இரவு நேரங்களில் ஏரியில் லேசா் ஒளியில் மீன், யானை, புலி, கழுகு உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் வந்து செல்வது போன்று காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெங்களூரைச் சோ்ந்த தொழில் நுட்ப வல்லுநா்கள் இதை வடிவமைத்துள்ளனா். பனி, மேக மூட்டம் காணப்படும் நேரங்களிலும் இந்த லேசா் ஒளி, ஒலி காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழலாம். இதன் சோதனை நிகழ்வு இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. இதை ஏரிச்சாலைப் பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு மகிழந்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: கொடைக்கானல் நட்சத்திர ஏரியை விரைந்து மேம்படுத்த வேண்டும். நடைபாதைகளை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். தற்போது பறவைகள், விலங்குகள் ஏரிக்கு வந்து செல்வது போல லேசா் ஒளி, ஒலி காட்சி நடத்தப்படுகிறது. இதில் வனத்தை பாதுகாப்பது போன்ற அமைப்பையும் காட்சிப்படுத்த வேண்டும் என்றனா்.