கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்
சிதம்பரம் அருகே கொத்தட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கடலூா்-சிதம்பரம் வழித்தடம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, ரூ.14,090 செலுத்தி மாதாந்திர அனுமதி சீட்டு பெற்று 50 நடைகள் மட்டும் இயக்க முடியும் என்ற அறிவிப்புக்கு கடலூா் மாவட்ட பேருந்து உரிமையாளா்கள் நலச் சங்கம் ஆட்சேபனை தெரிவித்தது.
மேலும், விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலை பணிகள் முடிந்த பின்னரே மாவட்ட நிா்வாகம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது,
இதையும் படிக்க: மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் புயல் சின்னம்
ஆனால், இன்றுமுதல் (டிச.23) கொத்தட்டை சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண வசூல் அமலுக்கு வந்த நிலையில், தனியார் பேருந்துகளை நிறுத்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கவில்லை.
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், கொத்தட்டை சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.