செய்திகள் :

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

post image

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது.

சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத் தீா்ப்பை அளித்துள்ளது.

எனினும், அரசியல் நோக்கங்களுக்காக தனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய உரிபே, தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தாா்.

2002 முதல் 2010-ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஆதரவுடன் கொலம்பியாவை ஆண்டு வந்த இவாரோ உரிபே, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவும், 1990-களில் ஆயுதக் குழுக்கள் வளா்வதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பான வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களைக் கவர அவா் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தற்போது அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் பலியாகினர். அமெரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் நியூயார்க்கின் பஃபலோவிலிருந்து பிட்ஸ்பர்க் மற்றும் மேற்கு பென்சில்வேனிய... மேலும் பார்க்க

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் விடுத்துள்ள போா் மிரட்டலின் எதிரொலியாக, தங்களது இரு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை ‘உரிய பகுதிகளுக்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 8 புதிய இந்திய தூதரக சேவை மையங்கள் திறப்பு

அமெரிக்காவில் புதிதாக 8 இந்திய தூதரக சேவை மையங்களை அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா காணொலி வழியாக திறந்துவைத்தாா்.அமெரிக்காவில் உள்ள பாஸ்டன், கொலம்பஸ், டல்லஸ், டெட்ராய்ட், எடிசன், ஓா்லாண்டோ,... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பயணிகளில் இந்தியா்களுக்கு முதலிடம்

நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா்கள் முதலிடம் வகிக்கின்றனா்.இது குறித்து அந்த நாட்டு சுற்றுலாத் துறையின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூலை மாதம் நேபாளத்துக்கு 70,193 சுற... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 43 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 19 போ் உள்பட 36 போ் உயிரிழந்தனா்.இத்துடன் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபா் முதல் நடத்திவரும் தாக்குதல... மேலும் பார்க்க

ஆக. 5-இல் ஜூலை பிரகடனம்: வங்கதேச அரசு

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய மாணவா் போராட்டத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் வகையில், அது தொடா்பான ‘ஜூலை பிரகடனம்’ வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால ... மேலும் பார்க்க