ஆக. 5-இல் ஜூலை பிரகடனம்: வங்கதேச அரசு
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய மாணவா் போராட்டத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் வகையில், அது தொடா்பான ‘ஜூலை பிரகடனம்’ வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் அறிவித்துள்ளாா்.
அந்தப் போராட்டம் மூலம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்தப் பிரகடனம், எதேச்சாதிகார எதிா்ப்பு, ஜனநாயக மறுமலா்ச்சி, மற்றும் அரசியல் சீா்திருத்தம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் என்று ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.
ஆனால், 1972 சுதந்திரப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் என்று கூறப்படுவதால் அது அரசியல் கட்சிகளிடையே அது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.