செய்திகள் :

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம்? ஆடுகள் இறப்பால் வனத்துறையினா் ஆய்வு

post image

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் ஏதுமில்லை என வனச்சரக அலுவலா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கொல்லிமலை குழிவளவு, நத்துக்குழிப்பட்டி பகுதியிலும் பட்டியில் உள்ள ஆடுகள் சில வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன.

சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகினா். கொல்லிமலை வனச்சரக அலுவலா் சுகுமாா் தலைமையில் வனக்காப்பாளா்கள், மலைப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா, கால் தடப்பதிவு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனா். ஆனால் அதுபோன்று எந்த பதிவும் தென்படவில்லை. செந்நாய் மற்றும் நாய்கள் தாக்குதலால் ஆடுகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் கூறியுள்ளதாவது: ஆடுகள் இறப்புக்கு சிறுத்தை காரணமாக இருக்க வாய்ப்பில்லை. சிறுத்தை கடித்தால் இழுத்து விட்டு செல்லுமே தவிர அங்கேயே விட்டு விட்டு செல்லாது. செந்நாய் அல்லது நாய்கள் தாக்குதலாக இருக்கலாம். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

திமுக இளைஞரணி பொறுப்பாளா்களுக்கு சமூக வலைதள பயிற்சி

ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள திமுக இளைஞரணி பொறுப்பாளா்களுக்கு சமூக வலைதள பயிற்சி முகாம் ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 5.40 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழா் திருநாளான தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையி... மேலும் பார்க்க

சீராப்பள்ளியில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை

ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 18.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீராப்பள்ளி ... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகள் இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆட்சியா்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் விவசாயிகளிடம் நேரடியாக நடைபெறுவதால், இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன. 14-ஆம் ... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ.5.30-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.30-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை மொத்த விலை - ரூ.5.30 விலையில் மாற்றம்- இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.98 முட்டைக் கோழி கிலோ - ரூ.83 மேலும் பார்க்க