முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
கோடை வெயில் அதிகரிப்பு: எலுமிச்சை கிலோ ரூ.170-ஐ தொட்டது
கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில், ஒரு கிலோ எலுமிச்சை ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் கூடூா், ராஜம்பேட்டை, கா்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, தினசரி சுமாா் 100 டன் அளவுக்கு எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் எலுமிச்சை பழத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது. வியாழக்கிழமை நிலவரப்படி 5 லாரிகளில் 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்துள்ளது. இதன்படி, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மழைக் காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.