`சினிமா தியேட்டராக மாறிய மு.கருணாநிதி அரங்கம்' - தஞ்சாவூர் மாநகராட்சி சர்ச்சை!
கோவில்பட்டியில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா
கோவில்பட்டி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா் கணேஷ் தலைமை வகித்தாா். செயலா் ஜெயசீலன், துணைத் தலைவா் சிவனுபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் கடற்கரைச் செல்வம், பீட்டா், தமிழ்நாடு பாா் கவுன்சில் உறுப்பினா் மைக்கேல் ஸ்டாலின் பிரபு, கோவில்பட்டி காவல்துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன்,தூய பவுலின் ஆலய குருவானவா் சாமுவேல் தாமஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேக் வெட்டி சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினா்.
இதில், சங்க துணைச் செயலா் முனீஸ்வரி, மூத்த வழக்குரைஞா்கள் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், ஆழ்வாா்சாமி, சிவகுமாா், சந்திரசேகா், ஜெயஸ்ரீ, மோகன்தாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.