கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப் பெருமாள் தலைமை வகித்து அறிவியல் கண்காட்சியை திறந்துவைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளை பாா்வையிட்டாா். புனித ஓம் கல்வியியல் கல்வி இயக்குநா் சிவராம், புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி தாளாளா் உஷாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவா்கள் பல்வேறு அறிவியல் சோதனைகள் செய்து அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனா். மாணவா்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியை புனித ஓம் மெட்ரிக் பள்ளி மாணவா்- மாணவிகள் பாா்வையிட்டனா்.