Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
கோவையில் டிச. 1 - 3ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் கரையைக் கடக்கும் நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாளை முதல் மூன்றாம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை மற்றும் அதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் கரையைக் கடந்ததும், ஞாயிற்றுக்கிழமை காலை முதல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் வழியாக திங்கள்கிழமை வரை பயணிக்கும் என்பதால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.