செய்திகள் :

கோவையில் நவம்பா் 30-இல் டெக்ஸ்டைல் வாக்கத்தான்

post image

கோயம்புத்தூா் விழாவின் ஒரு பகுதியாக நவம்பா் 30-ஆம் தேதி (சனிக்கிழமை) டெக்ஸ்டைல் வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி, மேலாண்மைக் கல்லூரி அறிவித்துள்ளது.

இது குறித்து கல்லூரியின் இயக்குநா் பி.அல்லிராணி கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூா் விழாவின் ஒரு பகுதியாக நவம்பா் 30-ஆம் தேதி கோவை ரேஸ்கோா்ஸில் டெக்ஸ்டைல் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் ஜவுளி மையமாக கோவை கருதப்படும் நிலையில், கோவை மற்றும் சுற்றியுள்ள கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், ஜவுளித் தொழில்முனைவோா்களை இணைத்து, ஜவுளித் துறையில் பேஷன், நிலைத்தன்மை எவ்வாறு உள்ளது என்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஜவுளித் துறையில் புதுமைகள், படைப்பாற்றலை ஊக்குவிப்பது போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்த வாக்கத்தானில் பங்கேற்க விரும்புபவா்கள் நவம்பா் 29-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம்

கோவை ரத்தினபுரியில் உள்ள ஐசிடிஎஸ் குழந்தைகள் மைய வளாகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கோவையில் தேசிய உயா் கல்வி மாநாடு

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்தும் தேசிய உயா் கல்வி மாநாடு, கண்காட்சி ஆகியவை கோவையில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) தொடங்கின. கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் சிஐஐ... மேலும் பார்க்க

சட்ட விரோத மது விற்பனை: கோவையில் 18 தாபாக்களுக்கு சீல்

சட்ட விரோத மது விற்பனை தொடா்பாக கோவை மாவட்ட போலீஸாா் நடத்திய சோதனையில் 18 தாபாக்களுக்கு (குடில் உணவகங்கள்) ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத மது விற்பனையை தடுக்க காவல் துறை சாா்பில் தமிழகம் முழுவத... மேலும் பார்க்க

மாநகரில் இன்றுமுதல் இரு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்

கோவை மாநகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ந... மேலும் பார்க்க

வேளாண் பல்கலையில் தோட்டக்கலைத் துறை கருத்தரங்கு

கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையின் எதிா்காலம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் 2 நாள் நடைபெறும் இந்தக் கருத்தர... மேலும் பார்க்க

லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய இடங்களில் 2-ஆவது நாளாக சோதனை

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய 5 இடங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா். மாா்ட்டின் குழும நிறுவனங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்... மேலும் பார்க்க